ஓபிஎஸ் உள்பட11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களை கட்சித்தாவல் சட்டப்படி தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடுத்த வழக்கில் சற்றுமுன் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் சபாநாயகரின் நிர்வாக விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று கூறி திமுகவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா தொடர்ந்த வழக்கில் சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிடமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த தீர்ப்பின் காரணமாக ஓபிஎஸ் உள்பட 11 பேர்களின் எம்.எல்.ஏ பதவிகளுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout