எச்சரிக்கை விடுத்த நீதிபதி: ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்ததால் அந்த மனுவை ரஜினிகாந்த் திரும்ப பெற முடிவு செய்துள்ளார்.
ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ரூ. 6.50 லட்சம் சொத்து வரி செலுத்த வேண்டும் என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதை எதிர்த்து ரஜினிகாந்த் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் பொதுமுடக்கம் காரணமாக திருமண மஹால் மூடி இருந்ததாகவும், அதில் இருந்து வருமானம் வராத நிலையில் அதற்கு விதிக்கப்பட்ட சொத்து வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனு சென்னை ஐகோர்ட் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்த போது, இந்த மனு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக கண்டனம் தெரிவித்த நீதிபதி, அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து ரஜினிகாந்த் தரப்பில் வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரியபோது நீதிபதியும் அதற்கு அனுமதி அளித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments