ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிட்ட விவகாரம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Tuesday,January 23 2018]

சமீபத்தில் நடந்து முடிந்த சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரை முன்மொழிந்த தீபக், சுமதி ஆகிய இருவரும் திடீரென பின்வாங்கியதால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் 'விஷாலை முன்மொழிந்த தீபக், சுமதி ஆகிய இருவரும் மிரட்டப்பட்டனரா என விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையில் இருவரும் மிரட்டப்பட்டது  தொடர்பான முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யலாம் எனவும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார் என்பது அனைவரும் அறிந்ததே.