நாளை 'கங்குவா' ரிலீஸ் தேதி. இன்று சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த ‘கங்குவா' திரைப்படம் நாளை பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் மேல் சில வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டதால் நீதிமன்றத்தின் உத்தரவுகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்த நிலையில் இந்த படம் வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
ஆனால் ஒவ்வொரு வழக்கையும் சமரசம் செய்து முடித்து இந்த படத்தை வெளியிட தயாரிப்பாளர் தீவிர முயற்சிகள் செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் ‘கங்குவா' படத்தை நாளை திட்டமிட்டபடி வெளியிட அனுமதி அளித்துள்ளது.
ஃபியூயல் டெக்னாலஜி என்ற நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய 1.60 கோடி ரூபாயை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் செலுத்தியதாகவும், மற்றொரு வழக்கில் ரூபாய் 6.40 கோடியை செலுத்தி உள்ள நிலையில் மீதி தொகையை டிசம்பருக்குள் செலுத்தப்படும் என்று உறுதி அளித்ததை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து சூர்யாவின் ‘கங்குவா' படத்தை நாளை திட்டமிட்டபடி வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி, ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ், ஜி மாரிமுத்து, தீபா வெங்கட் மற்றும் கேஎஸ் ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையில், வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் சுமார் 350 கோடி செலவில் உருவாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments