ஷங்கர் மீது லைகா தொடுத்த வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

  • IndiaGlitz, [Thursday,April 01 2021]

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்த திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்புக்கு ஆரம்பத்திலிருந்து பல்வேறு இடைஞ்சல்கள் வந்தது என்பதும் அதன் பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து கொரோனா வைரஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கிட்டத்தட்ட ஒரு வருடம் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் இந்த படம் தொடங்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் தேஜா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இதனை அடுத்து ’இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என சென்னை ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. லைகா நிறுவனம் தனது மனுவில் ’கமல் நடித்து வரும் ’இந்தியன் 2’ படத்திற்கு 150 கோடி பட்ஜெட் போடப்பட்டதாகவும், ஆனால் இதுவரை இந்த படத்திற்கு 256 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும் இயக்குனர் ஷங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்ட நிலையில் அவருக்கு இதுவரை 14 கோடி வழங்கப்பட்டு விட்டதாகவும் எனவே இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் அவர் வேறு படத்தை இயக்க கூடாது என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தது

இந்த நிலையில் இந்த மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது இயக்குனர் ஷங்கர் வேறு படங்களை இயக்க கூடாது என இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

ரஜினியை 'தலைவா' என அழைத்து வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சற்றுமுன்னர் இந்திய திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே

தாதா சாகேப் பால்கே விருது: ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஈபிஎஸ், முக ஸ்டாலின்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சற்று முன்னர் மத்திய அரசு திரை உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை அளித்தது என்பது தெரிந்ததே. மத்திய அமைச்சர் ஜவடேகர் அவர்கள் சற்று முன் இந்த

தாதா சாகேப் விருது, ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்: கமல்ஹாசன்

இந்திய திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது. அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள்

'குக் வித் கோமாளி' சீசன் 3க்கு அழைத்தால் போக மாட்டேன்: விஜய் பட நடிகை பேட்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி சீசன் 2 மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் சீசன் 1ஐவிட சிசன் 2 இரு மடங்குக்கும் மேலாக வரவேற்பை பெற்றுள்ளது

குக் வித் கோமாளி' ஃபைனலில் திடீர் மாற்றம்: ரசிகர்கள் மகிழ்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது என்பதும், இந்த சீசனில் கலந்து கொண்ட குக்'களும்,