பேருந்து கட்டண உயர்வு வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Wednesday,January 24 2018]

தமிழகத்தில் கடந்த 20ஆம் தேதி இரவில் திடீரென முன்னறிவிப்பு இன்றி பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இந்த கட்டணங்கள் 50%க்கும் அதிகமாக இருப்பதால் ஏழை, எளிய நடுத்தர மக்களின் நலனை கருதி பேருந்து கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருவதோடு போராட்டங்களையும் அறிவித்துள்ளன.

இந்த நிலையில் பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

இந்த வழக்கின் விசாரணையின் முடிவில் ,'பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது என்றும் கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

More News

எனக்கு 600 கோடி இந்தியர்கள் ஓட்டு போட்டார்கள்: சுவிஸ் நாட்டில் உளறிய பிரதமர்

உலக பொருளாதார மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் அவர் பேசியபோது, தனக்கு 600 கோடி இந்தியர்கள் ஓட்டு போட்டதாக தவறுதலாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜீவா-நிக்கி கல்ராணிக்கு கிடைத்த டபுள் சந்தோஷம்

நடிகர் ஜீவா, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவான 'கலகலப்பு 2' திரைப்படம் வரும் 9ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சச்சின் படத்திற்கு கிடைத்த இரண்டு விருதுகள்: இயக்குனர் பெருமிதம்

இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படமான 'சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்; என்ற திரைப்படம் கடந்த ஆண்டு மே மாதம் வெளியாகி

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாரா சங்கராச்சாரியர்?

தமிழ்-சமஸ்கிருத அகராதி நூல் வெளியீட்டு விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் , எச்.ராஜா, பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், மற்றும் காஞ்சி சங்கராச்சாரியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்

அரசாள்பவர் கேட்டால்தானே! பஸ் கட்டண உயர்வு குறித்து கமல்

நடிகர் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி தனிக்கட்சி தொடங்கி தீவிர அரசியலில் குதிக்கவுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவர் இதுகுறித்து தனது ரசிகர்களிடம் ஆலோசனை செய்து வருகிறார்