பேருந்து கட்டண உயர்வு வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Wednesday,January 24 2018]

தமிழகத்தில் கடந்த 20ஆம் தேதி இரவில் திடீரென முன்னறிவிப்பு இன்றி பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இந்த கட்டணங்கள் 50%க்கும் அதிகமாக இருப்பதால் ஏழை, எளிய நடுத்தர மக்களின் நலனை கருதி பேருந்து கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருவதோடு போராட்டங்களையும் அறிவித்துள்ளன.

இந்த நிலையில் பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

இந்த வழக்கின் விசாரணையின் முடிவில் ,'பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது என்றும் கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.