எஸ்.வி.சேகர் கைது குறித்து சென்னை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தனது முகநூலில் பதிவு செய்த பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் எஸ்.வி.சேகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது அந்த மனுவின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டதோடு, எஸ்.வி.சேகரை கைது செய்ய எந்தவித தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.
இதனால் எஸ்.வி.சேகர் உடனே கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று வரை அவர் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 'எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை என்று நீதிபதிகள் போலீசாருக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அவரை உடனே கைது செய்து விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout