விஷால் படங்களை தியேட்டரில், ஓடிடியில் வெளியிட தடை.. நீதிமன்ற உத்தரவுக்கு என்ன காரணம்?

  • IndiaGlitz, [Thursday,April 06 2023]

நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியிட தடை விதிப்பதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால், தமிழ் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சினிமா பைனான்சியர் அன்புச்செல்வன் என்பவரிடம் நடிகர் விஷால் ரூ.21 கோடி கடன் வாங்கி இருந்ததாகவும், அந்த கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் லைகா நிறுவனம் அந்த கடனை ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.



லைகா நிறுவனத்திற்கு இந்த கடனை விஷால் திருப்பி செலுத்தும் வரை அவரது தயாரிப்பில் வெளியாகும் படங்களின் உரிமைகளை வழங்க வேண்டும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் உத்தரவாதத்தை மீறி விஷால் தயாரிப்பில் உருவான ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படத்தை அவர் லைகா நிறுவனத்திற்கு கொடுக்காததால், லைகா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் விசாரணையின் போது நடிகர் விஷால் ரூபாய் 15 கோடியை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் அது மட்டும் இன்றி அவரது சொத்து பத்திரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.



இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் மேல்முறையீட்டு வழக்கில் விஷால் ரூபாய் 15 கோடியை பதிவாளரிடம் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பணம் செலுத்தாவிட்டால் விஷால் தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்கள் தியேட்டர் அல்லது ஓடிடியில் வெளியிட தடை விதித்துள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

More News

தயவுசெய்து அரசியலுக்கு வராதீர்கள்: விஜய் பட நடிகருக்கு வேண்டுகோள் விடுத்த ரசிகர்கள்..!

நடிகர் விஜய் நடித்த 'புலி' உள்பட பல திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகருக்கு தயவு செய்து அரசியலுக்கு வராதீர்கள் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

எங்களுக்கு ஓகே தான்… 12 வயது சிறிய நடிகரை மணக்க விரும்பும் பாலிவுட் நடிகை கருத்து!

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம்வரும் நடிகை மலைக்கா அரோரா தன்னைவிட 12 வயது சிறிய நடிகரான அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார்

உன்னை விட்டு எப்படி விலக முடியும்.. அன்பின் அடையாளமே நீதானே. 'சாகுந்தலம்' டிரைலர்..

சமந்தா நடித்த 'சாகுந்தலம்' என்ற திரைப்படம் வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி

'பரியேறும் பெருமாள்' நடிகர் கதிர் மனைவியை பார்த்ததுண்டா? இதோ அழகிய புகைப்படங்கள்..!

இயக்குனர்  மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான 'பரியேறும் பெருமாள்' என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் கதிர். இவரது திருமண தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது

போலீஸையே அடிக்குறியா..? நீ என்ன கேங்க்ஸ்டரா? அருண்விஜய்யின் 'மிஷன்' டீசர்..!

 அருண்விஜய் நடிப்பில் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவான 'அச்சம் என்பது இல்லையே' என்ற திரைப்படம் சமீபத்தில் 'மிஷன்' என்ற டைட்டில் மாற்றப்பட்டது என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை லைகா