விஷாலின் 'சக்ரா' படம் குறித்து நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
- IndiaGlitz, [Tuesday,February 16 2021]
விஷால் நடித்த ‘சக்ரா’ திரைப்படத்திற்கு ஏற்கனவே பல பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில் அந்த பிரச்சனையிலிருந்து மீண்டு பிப்ரவரி 19ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் ‘சக்ரா’ படத்தை திரையிட திடீரென தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைடன்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தங்களிடமும் ஒப்பந்தம் செய்த கதையை விஷாலை வைத்து படமாக்கி உள்ளதாக ‘சக்ரா’ படத்தின் இயக்குனர் எம்எஸ் ஆனந்தனுக்கு எதிராக புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகாருக்கு பதில் அளிக்குமாறு விஷால் மற்றும் இயக்குனர் ஆனந்தனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் விஷால் நடித்த ‘சக்ரா’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காப்பீட்டு உரிமை விவகாரத்தில் சிக்கி விஷாலின் ‘சக்ரா’ திரைப்படம் வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஷாலின் ‘சக்ரா’ வரும் 19ஆம் தேதி வெளியாகும் என அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இந்த தடை உத்தரவு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.