'இளையராஜா 75' நிகழ்ச்சி குறித்து சென்னை ஐகோர்ட்டின் முக்கிய உத்தரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள 'இளையராஜா 75' என்ற திரைக்கொண்டாட்டம் நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக தயாரிப்பாளர் சங்கத்தின் நிதி தவறாக கையாளப்படுவதாகவும், இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றபோது, தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் யூகத்தின் அடிப்படையில், அடிப்படை ஆதாரங்கள் இன்றி சுமத்தப்பட்டவை என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் வாதாட்டப்பட்டது. மேலும் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்குகள் அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வாதாட்டப்பட்டது.
இதனையடுத்து தயாரிப்பாளர்கள் சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி, 'இளையராஜா 75' நிகழ்ச்சியை நடத்த தடையில்லை என்று தீர்ப்பளித்தார். மேலும் இந்த ஆண்டுக்கான கணக்கு வழக்குகளை மார்ச் 3 பொதுக்குழுவில் தயாரிப்பாளர் சங்கம் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பால் வரும் 2,3 தேதிகளில் திட்டமிட்டபடி 'இளையராஜா 75' நிகழ்ச்சி நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout