எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Saturday,April 28 2018]

பெண் பத்திரிகையாளர் குறித்து நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி,சேகர் தனது முகநூலில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கின் அடிப்படையில் எஸ்.வி,.சேகர் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் எஸ்.வி.சேகர் தரப்பில் இருந்து முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது

இன்றைய விசாரணையின்போது புகார்தாரரின் முழுமையான வாதங்களை கேட்டறிந்த பின்னரே எஸ்.வி.சேகரின் கைது குறித்து உத்தரவிட முடியும் என்றும் அதற்கு முன்னர் எஸ்.வி.சேகரை கைது செய்ய போலீசாருக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். எனவே நீதிபதியின் இந்த உத்தரவால் எஸ்.வி.சேகா் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது

More News

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்தின் அசத்தலான முதல் நாள் வசூல்

மார்வல் சூப்பர் ஹீரோக்கள் திரைப்பிரவேசத்தின் பத்தாவது ஆண்டுக் கொண்டாட்டமாக நேற்று உலகம் வெளியாகியுள்ள அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ என்ற ஹாலிவுட் திரைப்படம் இந்தியா முழுவதிலும் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2018: தல தோனிக்கு மட்டுமே கிடைத்த மிகப்பெரிய பெருமை

ஐபிஎல் போட்டிகள் என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழா என்றால் அது மிகையாகாது. கடந்த 11 ஆண்டுகளாக இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

150 நாட் அவுட்: தல தோனிக்காக காத்திருக்கும் புதிய சாதனை

நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கி தூள் கிளப்பி வருகிறது.

அடல்ட் ஹாரர் காமெடி படத்தை பொழுதுபோக்கு படமாக பார்க்கவேண்டும்: இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார்

'ஹர ஹர மகாதேவகி' என்ற அடல்ட் காமெடி படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார், அதே பாணியில் மீண்டும் இயக்கியுள்ள திரைப்படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து.

ரஜினி நல்லவர் என்றால் 8 கோடி தமிழர்கள் யார்? சீமான்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று போராடும் பெரும்பாலான கட்சிகள் போராட்டத்தின் உண்மையான நோக்கத்தை விட்டுவிட்டு ரஜினியை எதிர்ப்பதிலும் விமர்சனம் செய்வதிலும்