வெள்ள காலத்தில் சிறப்பாகச் செயல்பட்ட தமிழக அரசு… சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு!!!

 

சமீபத்தில் தமிழகத்தை நிவர், புரெவி எனும் 2 புயல்கள் தாக்கிச் சென்றன. ஆனாலும் தமிழக அரசு மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கை காரணமாகப் பெரும் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. தமிழக அரசின் இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வரும் நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரும் பாராட்டுகளைத் தெரிவித்து உள்ளார்.

கடந்த முறை பெரும் வெள்ளத்தில் ஏற்பட்ட அனுபவத்தை எடுத்துக் கொண்டதால் இந்த ஆண்டு பெய்த மழையில் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பிய நிலையில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

மேலும் இந்த ஆண்டு மழையின்போது நீர் நிலைகள் முழுமையாக நிரம்பிய போதும் ஏரிகள் திறப்பால் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரேசன் பாராட்டு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணையின்போது பேசிய நீதிபதிகள் தமிழக அரசின் வெள்ள பாதுகாப்பு நடவடிக்கைக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.