சொடக்கு பாடல் குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்ற 'சொடக்கு மேல சொடக்கு போட்டு' பாடலில் "அதிகார திமிரை விரட்டி விரட்டி வெளுக்க தோணுது' என்ற வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இந்த பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர். அடுத்த விசாரணையின்போது இந்த பாடல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout