நீதிமன்ற நிகழ்வுகளை நித்யானந்தாவுக்கு வாட்ஸ் அப் மூலம் அப்டேட் செய்த சீடர் கைது: நீதிபதி அதிரடி
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை ஐகோர்ட்டில் இன்று நித்யானந்தா குறித்த வழக்கு ஒன்று நடைபெற்று கொண்டிருந்தபோது நித்தியானந்தாவின் சீடர் நரேந்திரன் என்பவர் நித்தியானந்தாவுக்கு வாட்ஸ் அப் மூலம் அவ்வப்போது அப்டேட் செய்ததை கண்டுபிடித்த நீதிபதி அவரை கைது செய்து விசாரணை செய்யும்படி உத்தரவிட்டார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு மதுரை ஆதினமாக நித்தியானந்தா முடி சூட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த நித்தியானந்தா, அந்த மனுவில் தன்னை தானே மதுரை ஆதினம் என்று குறிப்பிட்டு கொண்டார். இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், திருத்திய மனுவை தாக்கல் செய்யும்படி நித்தியானந்தாவுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்ட நிலையிலும் நித்தியானந்தா பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதனை கடுமையாக கண்டித்த நீதிபதி, பதில் மனு தாக்கல் செய்யாத நித்தியானந்தா மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
இந்த நிலையில் இன்றைய விசாரணையை அவ்வப்போது வாட்ஸ் அப் மூலம் நித்தியானந்தாவுக்கு அவருடைய நரேந்திரன் என்பவர் அனுப்பி கொண்டிருப்பதை நீதிபதி கையும் களவுமாக பிடித்து அவரை கைது செய்து விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து நரேந்திரன் கைது செய்யப்பட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments