பைக்கை எரித்து விடுங்கள்.. யூடியூப் சேனலை மூடிவிடுங்கள்.. டிடிஎப் வாசன் மீது காட்டமான நீதிபதி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அதிவேகமாக பைக் ஓட்டி தனது யூடியூப் சேனலில் அது குறித்த வீடியோக்களை பதிவு செய்யும் டிடிஎப் வாசன் சமீபத்தில் பெங்களூரு சாலையில் பைக்கில் செல்லும் போது வீலிங் செய்ய முயன்றார். அப்போது அவர் திடீரென விபத்துக்குள்ளாகி காயம் அடைந்த நிலையில் அவர் மீது பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஏற்கனவே இரண்டு முறை ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அடுத்து டிடிஎப் வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது நீதிபதி காட்டமாக ’நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய யூடியூப் வாசனின் பைக்கை எரித்து விட வேண்டும் என்றும் விளம்பரத்திற்காக இதுபோன்ற செயலில் ஈடுபடும் வாசனின் யூடியூப் சேனலை மூடிவிட வேண்டும் என்றும் காட்டமாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே விசாரணை நீதிமன்றம் இரண்டு முறை வாசனின் ஜாமீன் மனு ரத்து செய்த நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதியும் அவரது ஜாமீன் மனுவை ரத்து செய்துவிட்டார்.
முன்னதாக ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள பைக் வைத்திருக்கும் வாசன் 3 லட்சம் மதிப்புள்ள பாதுகாப்பு உடை அணிந்ததால் உயிர் தப்பி உள்ளார் என்றும் வாசனின் யூடியூப் சேனலை 45 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள் என்றும் அவரை பின்தொடரும் சிறுவர்கள் இளைஞர்கள் அதிவேகமாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துவதாகவும் எனவே அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்றும் காவல்துறை தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி டி.டி.எப் வாசன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் தனது உடல்நல குறைவு இருப்பதாக வாசன் கூறிய நிலையில் சிறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments