ஜெயலலிதா நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட தடை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- IndiaGlitz, [Wednesday,January 27 2021]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இல்லமான வேதா நிலையத்தை பொதுமக்கள் பார்க்க தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவகம் இன்று சென்னையில் திறக்கப்பட்டது என்பதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்த இந்த நினைவகத்தை பார்க்க லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் மெரினாவில் குவிந்தனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் என்ற வீட்டை நினைவு இல்லமாக சமீபத்தில் மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் இந்த முடிவிற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் அண்ணன் மகள் தீபா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததோடு இதுகுறித்து வழக்கு ஒன்றை நீதிமன்றத்தில் பதிவு செய்தனர்
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஜெயலலிதா நினைவு இல்லத்தை நாளை திறக்க திட்டமிடப்பட்டு நிலையில் அந்த இல்லத்தை திறக்க எந்தவித தடையும் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது
ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதால் வேதா நிலைய சாவியை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் ஒப்படைக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவின் வேதா நிலையம் திறக்கப்பட உள்ளதை அடுத்து பொதுமக்கள் பார்வையிட ஆவலாக இருந்த நிலையில் இந்த தடை உத்தரவு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது