மாஜி அமைச்சர் மணிகண்டனின் மனு தள்ளுபடி.....!

  • IndiaGlitz, [Friday,June 25 2021]

நடிகையளித்த புகாரின் பேரில் கைதான மாஜி அமைச்சர் மணிகண்டனின், ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நடிகை சாந்தினி பிரச்சனை:

நடிகை சாந்தினியை திருமணம் செய்துகொள்வதாக கூறி முன்னாள் அமைச்சர் மணிகண்டன், அவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இதனால் நடிகை கருவுற்ற நிலையில், தொடர்ந்து மூன்று முறை சட்டவிரோதமான முறையில் கட்டாய கருக்கலைப்பு செய்துள்ளனர். அமைச்சருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், கட்சி கூட்டங்களுக்கு செல்லும்போது சாந்தினியைத்தான் தன்னுடைய மனைவி என்றும் எல்லோரிடமும் அறிமுகம் செய்துள்ளார். இந்தநிலையில் நடிகை, அமைச்சரை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதால், உன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என்று மணிகண்டன் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தினி அடையார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதன் அடிப்படையில் காவல் துறையினர் பாலியல் வன்கொடுமை, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து மணிகண்டனின் முன் ஜாமீன் மனுவை, ஜூன் 16ஆம் தேதி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன்பின் தலைமறைவாகி இருந்த மணிகண்டனை, அடையார் மகளிர் காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஜூன்-20 ஆம் தேதி காவல் துறையினர் பெங்களூரில் ரகசிய இடத்தில் இவரை கைது செய்தனர். தற்போது நீதிமன்ற சிறையில் இவர் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆதாரங்கள் :

இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், மணிகண்டனின் ஜாமீன் மனு குறித்த வழக்கு, நீதிபதி செல்வகுமார் தலைமயில் விசாரணைக்கு வந்தது.

மணிகண்டன் சார்பாக பேசிய வக்கீல் வாதிட்டதாவது, சாந்தினி கர்ப்பமானதற்கும், அமைச்சருடன் பழகியதற்குமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. விளக்கம் இல்லாமல் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

காவல்துறை சார்பாக ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் இ.ஜெய்சங்கர் கூறியிருப்பதாவது, மணிகண்டன், சாந்தினியை தன்னை விட்டுபோகக் கூடாது என வாட்ஸ்அப்பில் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் ஆபாச புகைப்படங்களை அனுப்பியுள்ளார் என்று அறிக்கையை தாக்கல் செய்தார். இவர்கள் ஒன்றாக இருந்ததற்கான ஆதாரங்களும், சாட்சிகளின் வாக்குமூலங்கள் வாங்கப்பட்டதாகவும் இவர் கூறினார். கைதான மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மணிகண்டனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

 

More News

தனுஷின் 'D43' குறித்த சூப்பர் அப்டேட்: சத்யஜோதி பிலிம்ஸ் அறிவிப்பு

தனுஷ் நடித்துவரும் 'D43' என்ற திரைப்படத்தை தயாரித்து வரும் சத்யஜோதி நிறுவனம் அந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்து உள்ளதை அடுத்து தனுஷ் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர் 

கிஷோர் கே ஸ்வாமியை அடுத்து மேலும் ஒருவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

அரசியல் தலைவர்களை சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சனம் செய்ததாக அரசியல் விமர்சகர் கிஷோர் கே ஸ்வாமி கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை

நியூசிலாந்தை கவிழ்க்க திட்டம் போடும் பிசிசிஐ… ரசிகர்களை குஷிப்படுத்தும் தகவல்!

சவுதாம்ப்டனில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான உலகக் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி  வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்றது.

தூக்கத்தில் உங்களை அமுக்கும் பேய் எது தெரியுமா? அறிவியல் விளக்கம்!

நான் தூங்கிக்கொண்டு இருந்தபோது யாரோ என்னை பிடித்து அழுத்தினார்கள், என்னால் மூச்சு கூட விடமுடியவில்லை.

திருமணத்திற்கு முன்பு துணையின் Blood Groupஐ கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்…. ஏன்?

திருமணத்திற்காக நாம் ஜாதகத்தை மட்டும் பார்க்கிறோம். ஆனால் திருமணத்திற்கு முன்பு உங்கள் துணையின் ரத்த வகையை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்