கமல்ஹாசனின் 'குணா' ரீரிலீஸ் செய்ய தடை.. சென்னை ஐகோர்ட் உத்தரவு.. என்ன காரணம்?
- IndiaGlitz, [Wednesday,July 10 2024]
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘குணா’ திரைப்படத்தை ரீரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு கொண்டிருந்த நிலையில் இந்த படத்தை ரீரிலீஸ் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
‘குணா’ படத்தின் பதிப்புரிமையை வாங்கி உள்ளதாக கூறி கன்ஷியம் ஹேம்தேவ் என்பவர் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் ‘குணா’ படத்தை ரீரிலீஸ் செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது.
’குணா’ படத்தை ரீரிலீஸ் செய்ய பிரமிட் மற்றும் எவர்கிரீன் மீடியா நிறுவனத்திற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும், ‘குணா’ படத்தின் முழு உரிமைதாரராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்த நிலையில் இந்த மனுவுக்கு ஜூலை 22ஆம் தேதிக்கு பதில் அளிக்க வேண்டும் என்று பிரமிடு மற்றும் எவர்கிரீன் மீடியா நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மேலும் ’குணா’ படத்தை ரிலீஸ் செய்ய இடைக்கால தடை விதிப்பதாகவும் அவர் அறிவித்தார்.
இதனால் இந்த வழக்கு முடியும் வரை ’குணா’ திரைப்படம் ரீரிலீஸ் செய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.