கொலையுதிர்க்காலம் படத்திற்கு இடைக்கால தடை: நீதிமன்றம் உத்தரவு

  • IndiaGlitz, [Tuesday,June 11 2019]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சக்ரி டோலட்டி இயக்கிய 'கொலையுதிர் காலம்' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக இருந்த நிலையில் இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'கொலையுதிர் காலம்' என்பது மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய மர்ம நாவல் ஆகும். இந்த நாவலை படமாக்க சுஜாதாவின் மனைவியிடம் இருந்து 'விடியும் முன்' என்ற படத்தின் இயக்குனர் பாலாஜி குமார் உரிமை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் தான் உரிமை பெற்ற நாவலின் டைட்டிலான 'கொலையுதிர் காலம்' டைட்டிலில் திரைப்படம் வெளியிடுவது காப்புரிமையை மீறிய செயல் என்றும் எனவே இந்த படத்தை வெளியிட தடை விதிக்குமாறும் பாலாஜி குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 'கொலையுதிர்காலம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து மனுவுக்கு ஜூன் 21ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

More News

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு: பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு: 

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித், சோழமன்னர் ராஜராஜ சோழனை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார்

கிரேஸி மோகன் குறித்த பதிவிற்கு வருத்தம் தெரிவித்த தனுஷ் தந்தை!

நடிகர், வசனகர்த்தா, நாடக ஆசிரியர் கிரேசி மோகன் நேற்று காலமானதை அடுத்து திரையுலகமே சோகக்கடலில் மூழ்கியிருந்தது. திரைலகினர் அனைவரும் கிரேஸி மோகனுக்கு சமூக வலைத்தளங்கள்

ஓடும் காரில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண்: குடும்பத்துடன் கணவர் தலைமறைவு

ஓடும் காரில் இருந்து ஒரு பெண்ணை அவரது கணவரும் கணவரின் குடும்பத்தார்களும் தள்ளிவிடப்பட்ட சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

இயக்குனர்களை அவமதிக்க வேண்டாம்: வடிவேலுக்கு சமுத்திரக்கனி கண்டனம்

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2' படத்தின் பிரச்சனை கடந்த சில வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில் இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த வடிவேலு,

'கொலையுதிர்க்காலம்' தயாரிப்பாளருக்கு விக்னேஷ்சிவன் அனுப்பிய தகவல்!

நடிகை நயன்தாரா நடித்த 'கொலையுதிர்க்காலம்' திரைப்படத்தின் புரமோஷன் விழா ஒன்று சமீபத்தில் நடைபெற்றபோது அந்த விழாவில் நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி பேசிய சர்ச்சைக்குரிய கருத்தால்