வைரமுத்து மீதான வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Friday,January 19 2018]

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக வைரமுத்து மீது தமிழகத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தன்மீதான வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வைரமுத்து மனுதாக்கல் செய்திருந்தார்

இந்த வழக்கு இன்று காலையில் விசாரணைக்கு வந்தபோது, 'வைரமுத்து மேற்கோள் மட்டுமே காட்டியுள்ளார். இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. அவருடைய சொந்த கருத்து இல்லாததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என்று நீதிபதிகள் கருத்து கூறினர்

இந்த நிலையில் இன்று மதியம் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'வைரமுத்து மீது அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் முறைப்படி சரியான செக்சன்களில் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக அரசு வழக்கறிஞர் வாதாடினார். இதன்பின்னர் 'வைரமுத்து மீதான அனைத்து வழக்குகளையும் விசாரணை செய்ய இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், இந்த வழக்கு மீண்டும் பிப்ரவரி 16ஆம் தேதி விசாரணை செய்யப்படும் என்று உத்தரவிட்டனர். அனைத்து வழக்குகளுக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதால் வைரமுத்து தரப்பினர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது