சட்டசபையில் ஜெயலலிதா படத்தை அகற்றும் வழக்கின் தீர்ப்பு விவரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக சட்டசபையில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை அகற்ற வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தொடுத்த வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் அளிக்கப்பட்டது
இந்த தீர்ப்பின்படி, சட்டசபையில் ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் என திமுக தொடர்ந்த வழக்கில், சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பாணர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூசி அமர்வு தீர்ப்பளித்துள்ளது. 11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் கூறப்பட்ட அதே காரண்மதான் இந்த வழக்கிலும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி சபாநாயகர் தனபால் அவர்கள் சட்டமன்றத்தில் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments