சட்டசபையில் ஜெயலலிதா படத்தை அகற்றும் வழக்கின் தீர்ப்பு விவரம்

  • IndiaGlitz, [Friday,April 27 2018]

தமிழக சட்டசபையில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை அகற்ற வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தொடுத்த வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் அளிக்கப்பட்டது

இந்த தீர்ப்பின்படி, சட்டசபையில் ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் என திமுக தொடர்ந்த வழக்கில், சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி  இந்திரா பாணர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூசி அமர்வு தீர்ப்பளித்துள்ளது. 11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் கூறப்பட்ட அதே காரண்மதான் இந்த வழக்கிலும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி சபாநாயகர் தனபால் அவர்கள் சட்டமன்றத்தில் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

More News

ஓபிஎஸ் உள்பட11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களை கட்சித்தாவல் சட்டப்படி தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடுத்த வழக்கில் சற்றுமுன் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

என் வாழ்கையில் நான் இழந்த முக்கியமான விஷயம்: மைம் கோபி

தமிழ் சினமாவில் தவிர்க்க முடியாத கதாபாத்திரத்திர நடிகர்களில் முக்கியமானவர் மைம் கோபி. நிறைய படங்களில் வில்லன், நகைச்சுவை நடிகர் என நாற்பது படங்களுக்கு மேல் இலக்கை தொட்டிருப்பவர் இவர். 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குறித்த படத்தில் 'மெர்சல்' பட வசனகர்த்தா

ஆர்.எஸ்.எஸ் இயக்கம் குறித்த பிரமாண்டமான திரைப்படம் ஒன்று பாலிவுட்டில் தயாராகவுள்ளது.

மே 4-ல் ரிலீஸ் ஆகும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஆர்யா

கடந்த ஆண்டு வெளியான 'கடம்பன்' படத்தை அடுத்து நடிகர் ஆர்யாவுக்கு வேறு படங்கள் வெளிவரவில்லை. அவர் நடிப்பதாக இருந்த 'சங்கமித்ரா' திரைப்படமும்

'இரவுக்கு ஆயிரம் கண்கள்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

அருள்நிதி நடித்து முடித்துள்ள அடுத்த படமான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' திரைப்படம் கோலிவுட் வேலைநிறுத்தம் தொடங்கும் முன்பே ரிலீசுக்கு தயாராகிவிட்டது.