'சர்கார்' படத்தை தடை செய்யும் வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளிவரவுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என்றும், அதனால் இந்த படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்றும், ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் நடிகர் விஜய்யின் சர்கார் திரைப்படத்திற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து 'சர்கார்' திரைப்படம் திட்டமிட்டபடி தீபாவளி அன்று வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments