சக்ரா படத்தை ஓடிடிக்கு விற்க சென்னை ஐகோர்ட் தடை: பரபரப்பு தகவல்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
நடிகர் விஷால் நடித்த சக்ரா திரைப்படத்தை ஒடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதை வரும் 30ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனர் ரவீந்திரன் சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டில் ‘சக்ரா’ படத்தை ஓடிடியில் விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்திருந்தார். விஷால் நடித்த ஆக்சன் படத்தால் தனக்கு 8 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அந்த பணத்தை திருப்பித்தருவதாக விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் செய்து இருந்ததாகவும், ஆனால் விஷால் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும், அந்த பணத்தை விஷால் தனக்கு செலுத்த உத்தரவிட வேண்டும் என்று ரவீந்திரன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்
மேலும் ‘சக்ரா’ பட இயக்குனர் ஆனந்தன் என்பவர் தனது நிறுவனத்திற்கு கூறிய கதையைதான் விஷால் நடிப்பில் சக்ரா என்ற படத்தை இயக்கி இருப்பதாகவும், இதனால் அந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமெனவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்
இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ட்ரைடெண்ட் ஆர்டஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், தங்கள் நிறுவனத்திடம் சொன்ன கதையை ’சக்ரா’ என்ற பெயரில் வேறு நிறுவனத்திற்கு இயக்குனர் இயக்கியிருப்பதாக வாதாடினார்
இதையடுத்து, இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி வழக்கு விசாரணையை செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதுவரை, ’சக்ரா’ திரைப்படத்தை ஒடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய நீதிபதி தடை விதித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://jscss.indiaglitz.com/anomusercomment.jpg)