ஷங்கரின் 'இந்தியன் 2' வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- IndiaGlitz, [Wednesday,June 30 2021]
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ பட பிரச்சனை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
’இந்தியன் 2’ படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்க கூடாது என லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுபடி இருதரப்பினரும் ஏற்கனவே நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த வழக்கில் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனம் இடையே உள்ள பிரச்சனையை தீர்க்க மத்தியஸ்தனம் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி என்பவரை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்தியஸ்தராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஓய்வு பெற நீதிபதி ஆர் பானுமதி அவர்களின்ன் அறிக்கைக்கு பின் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.