சித்ரா கணவரின் ஜாமீன் மனு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
- IndiaGlitz, [Friday,January 08 2021]
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டு ஒரு மாதம் முடிந்த நிலையில், அவரது தற்கொலைக்கு காரணம் அவரது கணவர் ஹேம்ந்த் தான் என விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததே. மேலும் மெடிக்கல் சீட் வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்ததாகவும், அவர் மீண்டும் ஒருமுறை சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சித்ராவின் கணவர் ஹேமந்த் தற்போது சித்ரா தற்கொலை வழக்கில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். அவர் தனது ஜாமீன் மனுவில் கூறியிருப்பதாவது: சின்னத்திரையில் நடிக்ககூடாதென கூறியதால் தான் தன் மனைவி தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறை என் மீது குற்றம் சாட்டியுள்ளது. அது முற்றிலும் பொய். நாங்கள் கடந்த ஆகஸ்டில் திருமணம் செய்துகொண்டோம். நிச்சயதார்த்தத்துக்கு ரூ. 20 லட்சம் செலவழித்துள்ளேன்.
சித்ராவுக்கு 35 சவரன் நகைகளை போட்டுள்ளேன். காதலித்தது முதல் பதிவு திருமணம் செய்துகொண்டது வரை சித்ரா தனது குடும்பத்துடன் மகளை போல நெருங்கி பழகி வந்தார். அது சித்ராவின் தாயாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே சித்ராவின் தாயாருக்கு எங்கள் திருமணத்தில் உடன்பாடில்லை. எனக்கும் சித்ராவுக்கு தனிப்பட்ட முறையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எந்த குற்றமும் நான் இழைக்கவில்லை ஆகையால் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்
இந்த நிலையில் சித்ராவின் ஜாமீன் மனுவுக்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாக சித்ராவின் தாயார் கூறியிருக்கும் நிலையில் இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரை எதிர் மனுதாரராக சேர்த்த நீதிபதி, சித்ரா கணவர் ஹேமந்த் ஜாமீன் மனு தொடர்பாக பதில் அளிக்க ஜனவரி 18ம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளார்.
மீண்டும் இந்த வழக்கு ஜனவரி 18ஆம் தேதி விசாரணைக்கு வரும்போது சித்ரா கணவர் ஹேமந்துக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது தெரியவரும்