சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கிய 'சீமராஜா' திரைப்படம் வரும் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி திருநாளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் மிக அபாரமாக இருப்பதால் இந்த படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது.
இருப்பினும் ஒரு படத்தின் வெற்றிக்கு பெரும் சவாலாக இருப்பது ஆன்லைன் பைரஸி மட்டுமே. தமிழ் திரையுலகினர் பலவிதமான நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் திருட்டு டிவிடி மற்றும் ஆன்லைன் பைரஸியை மட்டும் முழுவதுமாக ஒழிக்க முடியவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமே.
இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் அடிப்படையில் சற்றுமுன் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர். சிவகார்த்திகேயன் நடித்துள்ள "சீமராஜா" படத்தை சட்ட விரோதமாக இணையதளங்கள் வெளியிட தடை என்பதுதான் இந்த உத்தரவு. இந்த உத்தரவு படக்குழுவினர்களுக்கு ஓரளவு ஆறுதலை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout