நடிகர் சங்கத் தேர்தல்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Tuesday,March 10 2020]

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த நிலையில் அந்த தேர்தல் செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் புதிய தேர்தலை 3 மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தலை மூன்று மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் விஷால் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் நடிகர் சங்க தேர்தல் மூன்று மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்று தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது

மேலும் நடிகர் சங்கத்தை தனி அதிகாரியை தொடர்ந்து நிர்வகிக்கலாம் என்றும் விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு ஏப்ரல் 8-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் நடிகர் சங்க உறுப்பினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

More News

கூவி..கூவி.. விற்கப்படும் கொரோனா. சிரிக்காம பாருங்க இந்த வீடியோவை..!

வியாபாரி ஒருவர் முகத்திற்கு அணியும் மாஸ்குகளை கொரோனா கொரோனா என கூவி கூவி விற்று வருகிறார்.

ஆப்கானிஸ்தானில் தொடர் குண்டுவெடிப்புகள்.. அசராமல் பதவியேற்ற அஷ்ரப் கனி..! வைரல் வீடியோ.

நான் புல்லட் ப்ரூஃப் ஆடை எதுவும் அணியவில்லை. வெறும் சட்டைதான். இந்த குண்டுகளெல்லாம் என்னைக் கொல்லாது. உயிரிழந்தாலும் இங்கு தான் இருப்பேன். மக்களுக்காகவே பணி புரிவேன்.

பா.ஜ.க. வில் இணையப் போகிறாரா??? மூத்த காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா

மத்தியப் பிரதேச அமைச்சரவையில் புதிய திருப்பமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்.

வாட்ச் மாதிரி தான் நம்ம பிசினஸ்: ஆர்யாவின் 'டெடி' டீசர்

25 லட்ச ரூபாய் மதிப்புள்ள சுவிஸ் நாட்டு வாட்சில காட்டுறா அதே டைம் தான் 100 ரூபாய்க்கு பிளாட்பார்மில் வாங்குற டிஜிட்டல் வாட்சிலும் டைம் காட்டும். ஆனால் அதை ஏன் வாங்குறாங்க தெரியுமா?  

காங்கிரஸ் பிரபலத்தை அடுத்து ரஜினியை சந்தித்த பாஜக பிரபலம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருக்கும் நிலையில் அவரை தினந்தோறும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை செய்து வருகின்றனர்