இளையராஜா-பிரசாத் ஸ்டுடியோ விவகாரம்: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

  • IndiaGlitz, [Friday,February 28 2020]

இசைஞானின் இளையராஜா கடந்த 45 ஆண்டுகளாக தனது படங்களுக்கான இசைப் பணிகளை சென்னை சாலிக்கிராமம் பகுதியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென பிரசாத் ஸ்டுடியோ - இளையராஜா தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தனது இசைப் பணிகளுக்கு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இடையூறாக இருப்பதாக இளையராஜா தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இளையராஜா கடந்த சில மாதங்களாக பிரசாத் ஸ்டுடியோவுக்கு செல்லாமல் இருந்தார். இதனையடுத்து இந்த வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்துக்கு சென்றது.

கடந்த சில மாதங்களாக இந்த வழக்கு விசாரணையில் இருந்த நிலையில் இன்று சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கின் விசாரணை நடந்தது. பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்ற தடை கோரி இளையராஜா தொடர்ந்த வழக்கின் இன்றைய விசாரணையில், ‘இந்த வழக்கை இரண்டு வாரத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து இளையராஜா-பிரசாத் ஸ்டுடியோ விவகாரம் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு யாருக்கு சாதகமாக வருகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.