தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரி: சென்னை ஐகோர்ட் அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Friday,May 10 2019]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று நடிகர் விஷால் தலைவராக பொறுப்பேற்றிருந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசு தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரியாக என். சேகர் என்பவரை நியமனம் செய்தது. இந்த நியமனத்தை எதிர்த்து நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் தனி அதிகாரி தனக்கு உதவியாக செயல்பட பாரதிராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோர் அடங்கிய 9 பேர் கொண்ட தற்காலிக குழுவை நியமனம் செய்தார். இந்த குழுவின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் கதிரேசன் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். ஒன்பது பேர் கொண்ட குழுவின் நியமனத்திற்கு தடை விதிக்குமாறு அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரிக்கு உதவியாக நியமிக்கப்பட்ட தற்காலிக குழுவுக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தற்காலிக குழு நியமனத்தை எதிர்த்த வழக்கை அடுத்த வாரத்துக்கு சென்னை ஐகோர்ட்
ஒத்திவைத்தது

More News

இரண்டாவது திருமணம் செய்து வைத்த மாமனார்! கதற கதற தீ வைத்து கொளுத்திய மருமகள்!

மாமனார் தன்னுடைய கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்ததால், ஆத்திரமடைந்த முதல் மனைவி மற்றும் அவருடைய தாயார் உறங்கிக் கொண்டிருந்த மாமனார் மீது

காதலுக்கு தாய் எதிர்ப்பு! விபரீத முடிவு எடுத்த பெண்!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அயனாவரத்தை சேர்ந்த, கல்லூரி மாணவி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

சசிகுமாரின் 'கொம்பு வச்ச சிங்கம்' லேட்டஸ்ட் அப்டேட்!

சசிகுமார் நடிப்பில் கடந்த ஆண்டு 'அசுரவதம்', இந்த ஆண்டு 'பேட்ட' ஆகிய திரைப்படங்கள் வெளிவந்த நிலையில் தற்போது அவர் 'நாடோடிகள் 2', 'கொம்பு வச்ச சிங்கம்' மற்றும் 'கென்னடி கிளப்'

விஷாலின் 'அயோக்யா' ரிலீஸில் திடீர் பிரச்சனை!

விஷாலின் 'அயோக்யா' திரைப்படம் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் திடீரென இந்த படத்தின் ரிலீஸ் தேதி

அயோக்யா ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்?

விஷால் நடித்த 'அயோக்யா' திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இந்த படத்திற்கான முதல் நாள் காட்சிகளுக்குரிய டிக்கெட்டுக்களும் முன்பதிவுகள் செய்யப்பட்ட நிலையில்