ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது! சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்குமாறு சரவணன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி சற்றுமுன் வெளியான தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த ஜெயலலிதா, ஏ.கே.போஸ் வேட்புமனுவில் கைரேகை வைத்திருந்தார். ஜெயலலிதாவின் கைரேகைக்க்கு அரசு மருத்துவர் பாலாஜி அளித்த சான்றிதழ் செல்லாது என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு அளித்தார்.

ஆனால் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுகவின் ஏ.கே.போஸ் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'விக்ரம் வேதா' தெலுங்கு ரீமேக் குறித்த முக்கிய அறிவிப்பு

மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த 'விக்ரம் வேதா' திரைப்படம் சூப்பர்ஹிட் ஆனது.

தீபாவின் திடீர் முடிவால் அதிமுக இன்ப அதிர்ச்சி

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, வரும் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.

வீட்டுக்காவலில் நடிகர் மோகன்பாபு? ஆந்திராவில் பரபரப்பு

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிரபல நடிகையுடன் விஜய் தேவரகொண்டா திருமணமா?

அர்ஜூன் ரெட்டி' என்ற ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகம் முழுவதும் புகழ்பெற்ற நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழிலும் 'நோட்டா', 'நடிகையர் திலகம்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.

பாஜகவில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர்

தேர்தல் சமயத்தில் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு கட்சிகளில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது வழக்கமான ஒன்றாகிவிட்ட நிலையில் பாஜகவில் இன்று பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் இணைந்துள்ளார்.