ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் நீக்கம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Saturday,September 29 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி', சூர்யாவின்  '24', கார்த்தியின் 'காஷ்மோரா', மெட்ராஸ், மற்றும் விஷாலின் 'சண்டக்கோழி-2' உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியவர்கள் அன்பறிவ் என்று கூறப்படும் அன்புமணி-அறிவுமணி என்னும் இரட்டையர்கள்

மதுரவாயலில் தனியாக பயிற்சி இடம் அமைத்து சண்டை பயிற்சிக்கான அனைத்து வசதிகளும் செய்துகொடுத்து தங்களது உதவியாளர்களுக்கு பயிற்சி அளித்து வரும் அன்பறிவ்வை சமீபத்தில் தென்னிந்திய சினிமா மற்றும் சின்னத்திரை சண்டைப்பயிற்சி இயக்குனர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்திலிருந்து நீக்கினர்.

எங்கள் பணியாளர்களுக்கு எங்கள் சொந்த செலவில் நாங்கள் பயிற்சி கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது? இதற்காக எங்கள் இருவரையும் சங்கத்திலிருந்து விலக்குவது சரியில்லை. எனவே இதனை மீண்டும் மறுபரிசீலனை செய்து எங்களை சங்கத்தில் இணைத்து கொள்ளுங்கள் என்று பலமுறை சண்டை பயிற்சியாளர்கள் சங்கத்தின் தலைவர் சோமசுந்தரம்,  செயலாளர் வி.மணிகண்டன், ஆகியோரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். ஆனால் அதற்கு அவர்கள் சரியான விளக்கம் அளிக்கத் தவறியதால், அதற்கான விளக்கம் கேட்டு அன்புமணி-அறிவுமணி மாஸ்டர்கள் கடந்த 16.09.2018 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று (27.09.18) விசாரணைக்கு வந்தது இவ்வழக்கை அன்பறிவ் மாஸ்டர்களின் வழக்கறிஞர் கார்த்திகை பாலனுக்காக அவரது சீனியர்  வழக்கறிஞர் திரு. ARL. சந்திரசேகர் ஏற்று நடத்தினார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு திரு. P.D.ஆதிகேசவலு, ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்புமணி-அறிவுமணி ஆகியோர் தென்னிந்திய திரைப்பட சண்டை இயக்குநர்கள் சங்கத்திலிருந்து சங்கத்தலைவர் திரு.சோமசுந்தரம் மற்றும் திரு. V.மணிகண்டன் ஆகியோரால், நீக்கப்பட்ட செயல் சட்டத்திற்கு புறம்பானது என்று தீர்ப்பளித்ததோடு, அவர்கள் நீக்கப்பட்ட செயலுக்கு தடை உத்தரவும் பிறப்பித்து தீர்ப்பளித்துள்ளார்.

More News

'சர்கார்' பாடல் விமர்சனத்திற்கு பாடலாசிரியரின் பதிலடி

சமீபத்தில் வெளியான தளபதி விஜய்யின் 'சர்கார்' சிங்கிள் பாடலான 'சிம்டங்காரான்' பாடல் மிக அதிக பார்வையாளர்களை பெற்று விஜய் ரசிகர்களின் வரவேற்புக்கு உள்ளானாலும்,

இந்தோனேஷியாவில் பயங்கர பூகம்பம்: சுனாமி தாக்கியதால் பரபரப்பு

இந்தோனேஷியா நாட்டில் சற்றுமுன் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பம் 7.7 ரிக்டர் அளவில் இருந்ததால் சுனாமி தாக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டது

விஜய்சேதுபதி வீட்டில் வருமான வரி ரெய்டா?

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள விஜய்சேதுபதி வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு என தகவல்கள் பரவியது.

'செய்றதுனா சொல்றதுல்ல;செய்றது': சண்டக்கோழி 2' டிரைலர் விமர்சனம்

விஷால், லிங்குசாமி கூட்டணியில் உருவான 'சண்டக்கோழி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 13 ஆண்டுகளுக்கு பின் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது.

'நோட்டா' திரைப்படத்தின் சென்சார் தகவல்கள்

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 'நோட்டா' திரைப்படம் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தமிழ், தெலுங்கு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.