தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Friday,December 21 2018]

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றுங்கள் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள ஒருசிலர் நேற்று முன் தினம் அலுவலகத்திற்கு பூட்டு போட்ட நிலையில் நேற்று அந்த பூட்டை உடைக்க முயன்ற தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கைது செய்யபப்ட்டார்.

இந்த நிலையில் நடிகர் விஷால் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகளை போலீஸ் தடுத்து நிறுத்தியது ஏன்? என்று கேள்வி எழுப்பியது. மேலும் உடனடியாக தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றுங்கள் என்று உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நேற்று விஷால் அளித்த பேட்டியின்போது நீதிமன்றத்தின் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்திருந்தார். அந்த நம்பிக்கை இன்று இந்த உத்தரவின்மூலம் நிறைவேறியுள்ளது.

More News

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் காலமானார்

தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார். புதுச்சேரியை சேர்ந்த எழுத்தாளர் பிரபஞ்சன் கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதியுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று காலமானார்

நயன்தாரா ரசிகர்களுக்கு மீண்டும் இரட்டை விருந்து

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' மற்றும் 'இமைக்கா நொடிகள்' ஆகிய படங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகி இரண்டுமே வெற்றி பெற்றது

எனக்கே இந்த கதி என்றால்...விஷால் ஆவேச பேட்டி

தயாரிப்பாளர் சங்கத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதை அடுத்து சங்கத்திற்கு சீல் வைத்த வட்டாட்சியர், இரு தரப்பினர்களும் சமாதானமாக வந்தால் மட்டுமே அலுவலகம் திறக்க வழிவகை செய்யப்படும்

விஜய்சேதுபதி நடிக்கும் மலையாள படத்தின் டைட்டில் அறிவிப்பு

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த '96' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து நேற்று வெளியான 'சீதக்காதி' திரைப்படமும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

நடிகர் மாதவன் மகன் பெற்ற முதல் தங்கப்பதக்கம்

பிரபல நடிகர் மாதவன் மகன் வேதாந்த் கடந்த ஏப்ரல் மாதம் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு பதக்கம் வென்றார்