நடிகர் சங்க தேர்தல்: வாக்கு எண்ணிக்கை குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற போதிலும் இதுகுறித்த வழக்கு நிலுவையில் இருப்பதால் தேர்தலில் பதிவான வாக்குகளை மறு உத்தரவு வரும் வரை எண்ணக்கூடாது என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதிக்க கோரி விஷால் தரப்பு சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் விஷால் தரப்பின் கோரிக்கையை ஏற்க சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது.
மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்த சென்னை ஐகோர்ட், தபால் வாக்குகள் தொடர்பாக பதில் மனுத்தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://jscss.indiaglitz.com/anomusercomment.jpg)