நடிகர் சங்க தேர்தல்: வாக்கு எண்ணிக்கை குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

  • IndiaGlitz, [Monday,July 08 2019]

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற போதிலும் இதுகுறித்த வழக்கு நிலுவையில் இருப்பதால் தேர்தலில் பதிவான வாக்குகளை மறு உத்தரவு வரும் வரை எண்ணக்கூடாது என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதிக்க கோரி விஷால் தரப்பு சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் விஷால் தரப்பின் கோரிக்கையை ஏற்க சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது.

மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்த சென்னை ஐகோர்ட், தபால் வாக்குகள் தொடர்பாக பதில் மனுத்தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தது.

More News

பிரமாண்டமான படத்தில் ஜிப்ரானை அடுத்து இணைந்த அனிருத்!

'பாகுபலி' நாயகன் பிரபாஸ், ஷராதா கபூர் நடிப்பில் உருவாகி வரும் பிரமாண்டமான திரைப்படம் 'சாஹோ'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது

முதல்வர் ஈபிஎஸ் கூட்டும் முக்கிய கூட்டத்தில் கமல்ஹாசன்!

முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து இன்று மாலை 5.30 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

மீண்டும் மதுமிதாவை பிரபலமாக்கும் அபிராமி-சாக்சி

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா, கூட்டத்தோடு கூட்டமாக பிரபலமாகாத ஒரு போட்டியாளராக முதல் வாரத்தில் இருந்தார்

நான் மறைத்து வைத்திருந்த ஒரே ஒரு விஷயம் இதுதான்: சமந்தா

திருமணத்திற்கு பின்னரும் தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் வெற்றிப்படங்களை கொடுத்து வரும் நடிகை சமந்தாவுக்கு சமீபத்தில் வெளியான 'ஓபேபி' திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

ஆண் போராளிகள் அனைவரும் பொறுக்கிகள்: கவிஞர் தாமரை ஆவேசம்

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுத்த சமூக போராளி முகிலன் கடந்த 140 நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் தற்போது அவர் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.