2.0 படம் குறித்த வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இந்தியாவின் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரான '2.0' திரைப்படம் வரும் வியாழக்கிழமை திரைக்கு வரவுள்ள நிலையில் இந்த படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதிக்குமாறு சென்னை ஐகோர்ட்டில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா மனுத்தாக்கல் செய்தது.
இந்த மனுவை ஐகோர்ட் நீதிபதி எம்.சுந்தர் இன்று விசாரணை செய்தபோது, 'தொலைபேசி சேவை நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், புதிய திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிட ஏற்கனவே ஐகோர்ட் தடை விதித்திருப்பதாக கூறினார்.
இதனையடுத்து, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நகலை தாக்கல் செய்ய நீதிபதி சுந்தர் உத்தரவு பிறப்பித்தார். மேலும் சுமார் 3 ஆயிரம் இணையதளங்களில், 2.0 திரைப்படத்தை வெளியிட தடை விதித்தும் அவர் உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து நாளை விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி சுந்தர் அறிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout