கணவனை கொலை செய்த மனைவிக்கு ஜாமீன்: தொலைபேசியில் விசாரணை செய்த நீதிபதி
- IndiaGlitz, [Tuesday,March 31 2020]
கணவனை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனைவிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தொலைபேசியிலேயே விசாரணை செய்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த தணிகைவேலன் என்பவர் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரை அவருடைய மனைவி ரேகா தான் கொலை செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் தனது 19 வயது மகளையும் 14 வயது மகனையும் கவனிக்க வேண்டும் என்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் ரேகா ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தொலைபேசி மூலம் விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி ராஜமாணிக்கம் அவருக்கு ஏப்ரல் 27 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.