தினமும் 2 மணி நேரம் டாஸ்மாக் திறக்கும் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- IndiaGlitz, [Thursday,April 16 2020]
ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் மூடப்பட்டுள்ளதால் மது பிரியர்களுக்காக தினமும் 2 மணி நேரம் டாஸ்மாக் கடைகளை திறந்து வைக்க வேண்டும் என சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த வசந்த் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில் கூறியபோது ’மது அருந்துவதை திடீரென நிறுத்துவதால் இதயத்துடிப்பு அதிகமாகி சுவாசப் பிரச்சனை உருவாகும் என்றும், கள்ளச்சந்தையில் மது பானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் மதுவிற்கு பதிலாக மெத்தனால், வார்னிஷ் போன்றவைகளை குடித்து ஒரு சிலர் மரணமடைந்துள்ளதாகவும் எனவே மதுப்பிரியர்களுக்காக குறைந்தது இரண்டு மணி நேரம் தினமும் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
ஆனால் இதுகுறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடியபோது அசாம் மற்றும் கேரளா மாநிலங்களில் மதுக்கடைகளை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதித்தபோது அந்த உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாகவும், எனவே டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிக்க முடியாது எனவும் வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மது, டாஸ்மாக், சென்னை ஐகோர்ட், உத்தரவு.