வினாயகரை விமர்சித்த வழக்கு: பாரதிராஜாவுக்கு நீதிமன்றம் கண்டனம்

  • IndiaGlitz, [Wednesday,July 11 2018]

பிரபல இயக்குனர் பாரதிராஜா கடந்த சில நாட்களாக ஆக்ரோஷமாக பொது மேடையில் பேசுவதும் களத்தில் இறங்கி போராட்டம் செய்வதுமாக உள்ளார். குறிப்பாக ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டம், பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்

இந்த நிலையில் பாரதிராஜா மீது ஒருசில வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதன் விசாரணையும் நடந்து வருகிறது. இந்த நிலையில் வினாயகர் குறித்து ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் பாரதிராஜா சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறினார். இதுகுறித்து நாராயணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாரதிராஜா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் மனுவை பாரதிராஜா தாக்கல் செய்தார். இதனையடுத்து பாரதிராஜாவுக்கு முன் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், வடபழனி காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்து உத்தரவாதம் அளித்து ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்றும் நிபந்தனை விதித்தது. ஆனால் நிபந்தனைகளை பாரதிராஜா பின்பற்றவில்லை என தெரிகிறது. தன்னால் குறிப்பிட்ட காலத்திற்குள் நீதிமன்றம் சென்று உத்தரவை பெற முடியவில்லை என்றும், இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் நீதிபதி, 'தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பாரதிராஜா நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த நேரம் கிடைக்கவில்லையா? என்றும் நிவாரணம் தேடி நீதிமன்றம் வரும்போது, நீதிமன்றம் பிறப்பிக்கும் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் பாரதிராஜாவுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் பாரதிராஜாவின் புதிய மனுவுக்கு பதிலளிக்கும்படி நாராயணுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

More News

முருகதாஸ் அவர்களே! என்னை ஞாபகம் இருக்கின்றதா? ஸ்ரீரெட்டியின் ஃபேஸ்புக் பதிவு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'சர்கார்' படத்திற்கு வில்லங்கம் மேல் வில்லங்கம் வந்து கொண்டிருக்கின்றது.

சீமராஜா; சமந்தா, சூரியின் முக்கிய பணிகள் முடிந்தது

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ள 'சீமராஜா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

நயன்தாராவை பாராட்டிய சமந்தா! ஏன் தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' படத்தின் டிரைலர் மற்றும் 'எனக்கு கல்யாண ஆசை வந்துருச்சு' சிங்கிள் பாடல் மிகபெரிய ஹிட்டாகியுள்ளது

பேரறிவாளன் விடுதலை குறித்து ரஞ்சித்திடம் ராகுல் கூறிய முக்கிய தகவல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளான பேரறிவாளன் உள்பட 7 பேர்கள் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

ராகுல்காந்தியை சந்தித்த ரஜினி பட இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசியுள்ளார்.