வினாயகரை விமர்சித்த வழக்கு: பாரதிராஜாவுக்கு நீதிமன்றம் கண்டனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் பாரதிராஜா கடந்த சில நாட்களாக ஆக்ரோஷமாக பொது மேடையில் பேசுவதும் களத்தில் இறங்கி போராட்டம் செய்வதுமாக உள்ளார். குறிப்பாக ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டம், பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்
இந்த நிலையில் பாரதிராஜா மீது ஒருசில வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதன் விசாரணையும் நடந்து வருகிறது. இந்த நிலையில் வினாயகர் குறித்து ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் பாரதிராஜா சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறினார். இதுகுறித்து நாராயணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாரதிராஜா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் மனுவை பாரதிராஜா தாக்கல் செய்தார். இதனையடுத்து பாரதிராஜாவுக்கு முன் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், வடபழனி காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்து உத்தரவாதம் அளித்து ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்றும் நிபந்தனை விதித்தது. ஆனால் நிபந்தனைகளை பாரதிராஜா பின்பற்றவில்லை என தெரிகிறது. தன்னால் குறிப்பிட்ட காலத்திற்குள் நீதிமன்றம் சென்று உத்தரவை பெற முடியவில்லை என்றும், இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் நீதிபதி, 'தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பாரதிராஜா நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த நேரம் கிடைக்கவில்லையா? என்றும் நிவாரணம் தேடி நீதிமன்றம் வரும்போது, நீதிமன்றம் பிறப்பிக்கும் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் பாரதிராஜாவுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் பாரதிராஜாவின் புதிய மனுவுக்கு பதிலளிக்கும்படி நாராயணுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout