அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமா உலகினர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருவது திருட்டு டிவிடி மற்றும் சட்டவிரோதமாக ஆன்லைனில் படம் வெளியிடுவது என இரண்டு மட்டுமே. நடிகர் சங்கத்தின் சார்பிலும் காவல்துறையினர்களும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும் ஆன்லைன் பைரஸியை கட்டுப்படுத்தவே முடியவில்லை
இந்த நிலையில் அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் இந்த படத்தை சட்டவிரோதமாக ஆன்லைனில் வெளியிட தடை விதிக்குமாறு சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட், 'அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட தடை விதித்தது
ஒவ்வொரு பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவரும்போது இதுபோன்ற தடை நீதிமன்றத்தால் விதிக்கப்படுகிறது. இருப்பினும் முதல் காட்சி முடிந்த சில மணி நேரங்களிலேயே ஆன்லைனில் வெளிவருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த விஷயத்தில் திரையுலகினர் தீவிர நடவடிக்கை எடுத்தாலன்றி இந்த பிரச்சனை முடிவுக்கு வராது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று சென்னையில் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இந்த காட்சி முடிவடைந்ததும் படம் பார்த்த பத்திரிகையாளர்கள் அஜித் உள்பட படத்தின் குழுவினர் அனைவரையும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout