ஆன்லைனில் பட்டாசு விற்பனை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
- IndiaGlitz, [Tuesday,October 16 2018]
ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த பட்டாசு வியாபாரி ஷேக் அப்துல்லா என்பவர் ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் பட்டாசு விற்பனையை அனுமதித்தால் பாதுகாப்பற்ற சீன பட்டாசுகள் விற்பனையை ஊக்குவித்தது போலாகிவிடும் என்றும், ஆன்லைன் விற்பனையால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவர் என்றும் ஷேக் அப்துல்லா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்தே ஆன்லைனில் பட்டாசு விற்பனைக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
மேலும் இந்த வழக்கு விசாரணை வரும் நவம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி என்பதால் தீபாவளி கழித்துதான் இந்த வழக்கின் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதால் வரும் தீபாவளிக்கு யாரும் ஆன்லைனில் பட்டாசு வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.