திருமணமான 24வது நாளில் சென்னை பெண் தற்கொலை: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,November 20 2019]

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணமான 24 வது நாளில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை அருகே உள்ள ஆவடி என்ற பகுதியைச் சேர்ந்த ராதா என்ற 24 வயது பெண், சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த பாலாஜி என்பவரை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு இருதரப்பு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி பாலாஜியும் ராதாவும் திருமணம் செய்து கொண்டனர்

இந்த நிலையில் பாலாஜியின் பெற்றோர் இந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டாலும், ராதாவிடம் பாலாஜியின் தந்தை தனது மகளின் திருமணம் முடியும் வரை தந்தை வீட்டிலேயே இருக்குமாறும் அதன் பின்னர் ஒரு நல்ல நாளில் நாங்களே முறைப்படி திருமணம் செய்து வைப்பதாகவும் வாக்கு கொடுத்துள்ளார். இதனை நம்பி ராதா தனது தந்தை வீட்டிற்குச் சென்று உள்ளார்

ஆனால் கடந்த சில நாட்களாக ராதாவிடம் பாலாஜி பேசுவதை தவிர்த்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து சந்தேகம் அடைந்த ராதா, பாலாஜி வீட்டுக்கு சென்று வந்ததாகவும், மீண்டும் திரும்பி வந்தபோது ராதா மிகவும் சோர்வுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென தனது தந்தை வீட்டில் ராதா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

More News

பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் விஷால்

விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கிய 'ஆக்சன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது

யோகி பாபுவின் அடுத்த படம் குறித்த அசத்தல் தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்து வரும் நடிகர் யோகிபாபு, ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவர் ஹீரோவாக நடித்த 'தர்மபிரபு', கூர்கா உள்பட ஒரு சில திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது

முதல்வர் வேட்பாளர் கமல்தான்: இணைப்புக்கு முன்னரே பிரபல நடிகையின் சர்ச்சைக்கருத்து

கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் அரசியல் களத்தில் குதித்துள்ளனர். கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து களப்பணிகள் செய்து வருகிறார். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க அனைத்து பணிகளையும் முடித்து தயார் நிலையில் உள்ளார்.

அண்ணிக்கு பிரபல நடிகர் கொடுத்த வித்தியாசமான பரிசு!

நடிகர் தனுஷ் தனது அண்ணி கீதாஞ்சலி செல்வராகவன் அவர்களுக்கு வித்தியாசமான பரிசு கொடுத்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

நயன்தாரா பிறந்தநாளில் சிங்கப்பூர் ரசிகர் செய்த அர்ச்சனை

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர் என்பதும் அவருடைய பிறந்தநாளுக்கு திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களும்