சீனாவில் இருந்து இந்தியாவுக்கு தனியாக விமானத்தில் வந்த சென்னை மாணவி!
- IndiaGlitz, [Saturday,February 01 2020]
சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் மிக பயங்கரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காரணமாக 200க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் சீனாவுக்குச் செல்லும் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சீனாவில் இருக்கும் வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் சீனாவில் மருத்துவ படிப்பு படித்து வரும் சென்னை மாணவி ஒருவர் இந்தியாவிற்கு திரும்பி உள்ளார். அவர் வந்த விமானத்தில் அவர் மட்டுமே தன்னந்தனியாக பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் எம்பிபிஎஸ் இறுதியாண்டு படித்து வரும் சென்னையைச் சேர்ந்த வேலம் என்ற மாணவி, கொரோனா வைரஸ் காரணமாக நாடு திரும்ப முடிவு செய்தார். இதனை அடுத்து அவர் விமான நிலையத்தில் காத்திருந்த போது இந்தியா செல்லும் விமானத்தில் செல்ல அவருக்கு டிக்கெட் கிடைத்தது. ஆனால் அந்த விமானத்தில் அவரை தவிர வேறு எந்த பயணியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே ஒரு பயம் இருந்தாலும் விமானத்தை ரத்து செய்யாமல் அந்த மாணவிக்காக விமானம், சிங்கப்பூர் வழியாக இந்தியா வந்தது. தன்னந்தனியாக விமானத்தில் பயணம் செய்த அந்த மாணவி, தனது செல்போனில் செல்பி புகைப்படம் எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ஒரே ஒரு பயணி மட்டுமே இருந்தாலும் விமானத்தை ரத்து செய்யாமல் அந்த பயணியின் பாதுகாப்பை கருதி விமானத்தை இயக்கிய அந்த விமான நிறுவனத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.