இருமலுக்கு நரம்பு ஊசியா? பட்டதாரி இளம்பெண் பரிதாப மரணம்
- IndiaGlitz, [Friday,November 29 2019]
சாதாரண இருமல் மற்றும் வாந்திக்கு நரம்பு ஊசி போட்டதால் பெண் பட்டதாரி ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சென்னை அருகே நடந்துள்ளது
சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் என்ற பகுதியை சேர்ந்த நித்யா என்ற 21 வயது பட்டதாரி பெண்ணுக்கு, சமீபத்தில் இருமல் மற்றும் வாந்தி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று பெண் மருத்துவரிடம் அவர் சிகிச்சை எடுத்துள்ளார்
நித்யாவை பரிசோதித்த பெண் மருத்துவர் அவரது கையில் நரம்பு ஊசி போட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சிறிது நேரத்தில் நித்யாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் மருத்துவர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளார்
மயக்கம் அடைந்த நித்யாவை அவரது பெற்றோர் அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு அவரை அனுமதிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே நித்யா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
சாதாரண இருமல் மற்றும் வாந்திக்கு நரம்பு ஊசி போட்டதால்தான் அவர் மரணம் அடைந்து இருப்பதாக நித்யாவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்யாவுக்கு சிகிச்சை அளித்த பெண் மருத்துவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்