close
Choose your channels

சென்னை இளம்பெண் தூக்கில் தொங்கி தற்கொலை: விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Friday, July 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் திருமணமான ஒரே வருடத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை என்ற பகுதியை சேர்ந்த எம்பிஏ பட்டதாரி பிரியங்கா. இவருக்கும் காட்டான் குளத்தூர் பகுதியைச் சேர்ந்த நிரேஷ் குமார் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது. பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து கொண்டிருக்கும் நிரேஷ் குமார் மேட்ரிமோனியல் மூலமாக பிரியங்காவை பார்த்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திருமணம் முடிந்து புகுந்த வீட்டில் பெரும் கனவுகளுடன் வாழ சென்ற பிரியங்காவுக்கு ஒரு சில மாதங்களிலேயே பிரச்சனைகள் தொடங்கின. திருமணத்திற்கு 140 பவுன் நகை போடுவதாக பிரியங்காவின் பெற்றோர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால் 40 பவுன் மட்டுமே அவர்களால் போட முடிந்ததாகவும், திருமணத்திற்கு பின் மீதி 100 பவுன் நகைகளை போடுவதாகவும் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் நிரேஷ் குமார் குடும்பத்தினர் மீதி நகையை வாங்கி வரச்சொல்லி பிரியங்காவை கொடுமைப்படுத்தியதாகவும், இதனால் அழுதுகொண்டே பிரியங்கா பெற்றோர் வீட்டிற்கு வந்ததாகவும் தெரிகிறது. பிரியங்காவின் பெற்றோர்கள், பிரியங்கா குமார் குடும்பத்தினருடன் சமாதானமாக பேசி விரைவில் 100 பவுன் நகைகளை போட்டு விடுவதாக கூறி உள்ளனர்.

இந்த நிலையில் தாய் வீட்டுக்கு வந்ததில் இருந்து அழுது கொண்டே இருந்த பிரியங்கா திடீரென தனது அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் இந்த தற்கொலைக்கு பின்னணியில் வரதட்சணை கொடுமை இருப்பதை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து நரேஷ் மற்றும் அவர்கள் குடும்பத்தினரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். திருமணமான ஒரே வருடத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் ஒருவர் சென்னையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment