சென்னையில் அடுத்த தலைமுறை இ-பைக்குகள்… துவக்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

சென்னையில் புதிய இ-பைக்குகள், அதை சார்ஜ் செய்வதற்கும் பராமரிப்பதற்கும் தேவையான செல்பி பாயிண்ட் மற்றும் அடுத்த தலைமுறை ஜென் சைக்கிள்கள் போன்றவை இயக்கப்பட உள்ளன. இதனால் சென்னை மாநகரம் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்க இருக்கிறது. இதற்காக ரூ.28 லட்சத்தில் புதிய “நம்ம சென்னை ஸ்மார்ட் சிட்டி” என்ற திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

இந்த ஸ்மார் சிட்டி திட்டம் சென்னை கார்பரேஷனுடன் இணைந்து செயல்பட இருக்கிறது. இதில் 500 மின்சார பைக்குகள் மற்றும் 1,000 புதிய ஜென் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இதை பயனாளர்கள் சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து பயன்படுத்திக் கொள்வதற்கு வசதியாக 78 நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த நிறுத்தங்களில் மின்சார பைக்குகளை சார்ஜ் செய்து கொள்வதற்கும் பராமரிப்பு செய்வதற்கும் ஏற்ப அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளன.

மேலும் புதிய மின்சார பைக்குள் பராமரிப்பதற்கும் இயக்குவதற்கும் ஏற்ப எளிதாக உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த மின்சார பைக்குகளில் சங்கிலிகளுக்கு பதிலாக மென்னீசியத்தில் செய்யப்பட்ட அலாய் வீல்கள் மற்றும் டியூப்லெஸ் டயர்களும் பொருத்தப்பட்டு உள்ளன. இதனால் பராமரிப்பு மற்றும் இயக்கம் எளிதாக இருக்கும் என்றும் ஸ்மார்ட் பைக்கின் சந்தைப்படுத்துதல் மறறும் செயல்பாடுகளின் துணைத் தலைவர் ரஞ்சித் ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார்.

மேலும் மெக்னீசியத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ள இதன் சக்கரங்கள் லேசாகவும் இருப்பதோடு, குழாய் இல்லாத டயர்களால் பஞ்சர் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்பதும் இத்திட்டத்தில் பெரிய நிம்மதியாகப் பார்க்கப்படுகிறது. மின்சாரத்தில் இ-பைக்குகள் இயக்கப்படுவதால் பயனாளர்கள் உழைப்பை செலவழிக்காமல் எளிதான பயணத்தை மேற்கொள்ளலாம்.

இந்நிலையில் இ-பைக்குகளை எடுக்கும் பயனாளிகளுக்கு முதல் 10 நிமிடத்திற்கு ரூ.10 அதன்பிறகு ஒவ்வொரு நிமிடத்திற்கு ரூ.1 என்று வசூல் செய்யப்பட இருக்கிறது. மேலும் கூடுதல் ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும். அதேபோல ஜென் பைக்குகளுக்கு முதல் ஒரு மணி நேரத்திற்கு ரூ.5.5 மற்றும் அதன் பிறகு அரை மணி நேரத்திற்கு ரூ.9.9 செலவாகும். மேலும் கூடுதல் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்துள்ள இப்புதிய திட்டத்தால் சென்னை வாசிகள் அனைவரும் இருந்த இடத்தில் இருந்தே சுலபமாக பயணம் மேற்கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இத்திட்டத்திற்கு பலரும் வரவேற்புகளைத் தெரிவித்து உள்ளனர்.

More News

5 வயது சிறுவன் செய்த அதிர்ச்சி காரியம்… வைரல் வீடியோ!

சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு வீடியோவில் 5 வயது சிறுவன் லேண்ட் க்ரூசர் காரை அசால்ட்டாக ஓட்டுகிறான்

தலைநகர் டில்லியில் திடீர் குண்டுவெடிப்பு…  இஸ்ரேல் தூதரம் அருகே நிகழ்ந்ததால் பதற்றம்!!!

​​​​​​​இன்று (29.01.2021) மாலை தலைநகர் டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே திடீர் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

ஹரி-அருண்விஜய் படத்தின் அடுத்த ஆச்சரிய அப்டேட்!

பிரபல இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் இணையும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் அருண்விஜய்யின் 33வது படமான இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில்

'கே.ஜி.எஃப் 2' ரிலீஸ் தேதியின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த கேஜிஎப் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம்

இந்த டீம் கூட சேராதீங்க, மோசமானவங்க: நெட்டிசனின் பதிவுக்கு பதிலடி கொடுத்த அனிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சி 105 நாட்களாக நடைபெற்றது என்பதும் சமீபத்தில் முடிவடைந்த இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரியும், ரன்னராக பாலாஜியும் தேர்வு பெற்றனர் என்பது தெரிந்ததே