சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு: என்னென்ன இயங்கும்? எப்பொழுது வரை இயங்கும்?
- IndiaGlitz, [Monday,June 15 2020]
சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு வரும் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கின்போது என்னென்ன இயங்கும்? எத்தனை மணி வரை இயங்கும்? என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சலுக்கு மட்டும் அனுமதி.
சென்னையில் டீ கடைகள் இயங்க அனுமதி இல்லை.
ஊரடங்கு காலத்தில் 4 மாவட்டங்களில் வங்கிகள் 10 நாட்கள் அடைக்கப்படும். இருப்பினும் ஜூன் 29 மற்றும் 30ஆம் தேதி மட்டும் வங்கிகள் இயங்க அனுமதிக்கப்படும். முழு ஊரடங்கில் வங்கிகள் மூடப்படுவது இதுவே முதல்முறை.
ஏடிஎம்கள் வழக்கம்போல் இயங்கும்.
ஊரடங்கின் போது ஆட்டோ, டாக்ஸிகளை இயக்க தடை விதிப்பு. எனினும் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிக்கு மட்டும் அனுமதி உண்டு.
மாநில அரசுத்துறைகள், மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் 33% பணியாளர்களுடன் இயங்க அனுமதி.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரேஷன் கடைகள் இயங்காது; நிவாரணப் பொருட்கள் வீடு தேடி வரும்.
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படும்.
அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.
தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதி பெற்று இயங்கலாம்.
திருமணம் மற்றும் இறப்பு காரணங்களுக்கு சரியான ஆதாரங்களை காட்டினால் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும்.