சென்னை மருத்துவமனையில் கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை மரணம்! 17 வயதில் இப்படி ஒரு சோகமா?

  • IndiaGlitz, [Tuesday,November 15 2022]

சென்னையை சேர்ந்த பிரியா என்ற கால்பந்து வீராங்கனைக்கு கால் அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவர் சற்றுமுன் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வியாசர்பாடி என்ற பகுதியைச் சேர்ந்த 17 வயது பிரியா என்பவர் சிறு வயது முதலே கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சென்னை ராணிமேரி கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வரும் இவர் மாவட்ட அளவிலான பல கால்பந்து போட்டிகளில் பங்கேற்று உள்ளார்.

இந்த நிலையில் கால் சவ்வு பிரச்சனை காரணமாக பிரியாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்த சில மணி நேரங்களுக்கு பின் ஏற்பட்ட சிக்கல் காரணமாக மேல் சிகிச்சைக்காக அவர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் திடீரென உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

17 வயதில் கால்பந்து போட்டியில் பெரும் சாதனை செய்ய வேண்டும் என்று பெரும் கனவுகளுடன் இருந்த பிரியா திடீரென காலமாகியுள்ளது அவரது குடும்பத்தினர்களூக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.